கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக மகளிர் அணி சார்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா, சுப்ரியா சுலே எம்.பி. சுபாஷனி அலி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள பெண் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். இந்த தகவலை திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.