தமிழக முதல்வர் ஸ்டாலினை உலக மகளிர் தினத்தையொட்டி சந்தித்த முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள் வரையிலான பெண் காவல்துறையினருக்கும் வாழ்த்து
தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் , டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் உடனிருந்தனர்.