ஆண்டுதோறும் மார்ச் 8- தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை வழங்குதல் வணிகம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியலில் பெண்களை சமமாக மதித்தல் போன்ற கொள்கைகளை பணியிடங்களில் அமல்படுத்துவது நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் பணி புரியக்கூடிய பெண் காவலர்களுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் விடுமுறை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் அனுமதியுடன் கூடிய விடுமுறை அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.