Skip to content

பாபநாசத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் காவல் துறை மற்றும் பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின. பாபநாசத்தில் நடந்த விழாவில் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சாசனத் தலைவி தில்லை நாயகி வரவேற்றார். காவல் ஆய்வாளர்கள் பாபநாசம் சகாய அன்பரசு, கபிஸ்தலம் மகாலெட்சுமி முன்னிலை வகித்தனர். இதில் பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் பங்கேற்றுப் பேசும் போது நான் டி.எஸ்.பியாக வர என் மனைவி தான் காரணம். சம பங்கைத் தாண்டி பெண்கள் உயர்ந்து விட்டனர் என்றார். பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் அப்துல் கனி பங்கேற்றுப் பேசும் போது பெண்கள் முடிவெடுப்பதில் தெளிவானவர்கள். பெண்கள் உங்களுடைய முடிவை நீங்களே எடுக்க வேண்டும். குடும்பத்தின் மையப் புள்ளி நீங்கள் தான் என்றார். இதில் திருமணத்திற்குப் பின் கணவரால் டிகிரி படித்த சந்தியா கெளரவிக்கப் பட்டார். நிறைவாக கேக் வெட்டப் பட்டது. இதில் பாபநாசம் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், பிரபாகரன், முத்தமிழ்ச் செல்வம், வட்டாரத் தலைவர் கணேசன், வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சாசன செயலர் திலகவதி, பொருளாளர் வசந்தி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உஷா, டாக்டர்கள் திலகவதி, டீன் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். பட விளக்கம்: பாபநாசத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி கொண்டாடப் பட்டது.

error: Content is protected !!