உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் வசிக்கும் இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள நாதன் தனியார் மருத்துவமனை சார்பாக மூன்றாம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் மருத்துவமனை பணியாற்றும் பெண்கள் மற்றும் கல்லூரியில் பயிலும்
செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய பெண்கள் உருவம் பதிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி பேரணி புறப்பட்டு மாரியம்மன் கோவில், திண்ணப்பா திரையரங்கம், 80 அடி சாலை, பேருந்து நிலையம்,ஜவகர் பஜார் வழியாக மீண்டும் மருத்துவமனையில் வந்து அடைந்தது.