கரூரில் சீரடி சாய்பாபாவின் புனித பாதுகை தரிசனத்திற்காக, சீரடியில் இருந்து பாதுகை எடுத்து வரப்பட்டு, கரூர் பாபா கோவிலில் வைத்து பக்தர்கள் தரிசனத்திற்க்காக எடுத்து வந்தனர். பாதுகைகளை கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானவிலிருந்து மேளதாளங்கள் முழங்க, பெண்கள் கோலாட்டம் ஆடி, பக்தி பாடல்களை பாடி, பரவசத்துடன் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
பின்னர் மேட்டு தெருவில் உள்ள பாபா கோவிலில் வைத்து பூஜைகள் செய்த பிறகு பக்தர்களின் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாதுகை தரிசனம் செய்து வருகின்றனர்.