சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், அக்கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹரி பத்மனின் மனைவி இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், 2 பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில், முன்னாள் மாணவி ஒருவர் அளித்த போலி புகாரின் அடிப்படையில் எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் அளித்த மாணவி, நாட்டியம் கற்றுக்கொண்டு விட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பே கனடா சென்று விட்டார். அந்த மாணவி 2019 செப்டம்பரில் எனது குடும்ப விழாவிலும் கலந்து கொண்டார். எனவே இந்த விவகாரம் பற்றி மூத்த பெண் அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.