திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் இவருடைய மனைவி ஜானகி இவர் திருமணத்திற்கு சமையல் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு 12 வயதில் ஒரு ஆண் பிள்ளை உள்ளன.
ராஜேந்திரன் உயிரிழந்த நிலையில் ஜானகி மற்றும் அவருடைய ஆண்பிள்ளை தனியாக வசித்து வருகின்றனர்
இந்த நிலையில் இன்று ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சமையல் வேலை செய்துவிட்டு திரும்பவும் வீடு திரும்பி கொண்டிருந்தார்
அப்போது நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள காத்தாரி செல்லும் சர்விஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார்
அப்போது வேலூரில் இருந்து பெங்களூர் செல்லும் அரசு பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கத்தாரி சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த ஜானகியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தந்தை உயிரிழந்த நிலையில் தற்போது தாயும் அரசு பேருந்து மோதி உயிரிழந்து 12 வயது ஆண் குழந்தை தற்போது நிற்கதியாய் நிற்கும் சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..