Skip to content
Home » அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மூத்த மகள் கர்ப்பக லட்சுமியை அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கு, கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். இளவரசன் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கர்ப்பகலட்சுமிக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கர்ப்பகலெட்சுமி படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தையின் அழுகுரலை கேட்ட கர்ப்பகலட்சுமியின் மாமியார் செளந்தர்யவள்ளி படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, கர்ப்பகலெட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து கர்ப்பகலட்சுமியின் தந்தை பரமசிவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அழகிய மணவாளன் கிராமத்திற்கு வந்த பரமசிவம் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *