Skip to content
Home » கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக வழங்கி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிய நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. தினமும் இந்த நூலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று அந்த நூலகத்திற்கு வந்த இளம் பெண் ஒருவர் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டு நூலகத்தில் இருந்த நபர்கள் அதிர்ச்சி அடைந்து  ஆட்டோவை வரவழைத்து, சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் மயக்கமடைந்த இளம் பெண்ணை ஆட்டோ வரும் வரை காத்திருந்து சிகிச்சைக்காக அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!