உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா (40) ஏப்ரல் பதிப்பில் இதன் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
வழக்கமாக பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுப்பவர்கள் ஆடையில்லாமல் தான் கொடுப்பார்கள். ஆனால், மார்லின் ஷியாப்பா அப்படிச் செய்யாமல், டிசன்டாகவே போஸ் கொடுத்திருந்தார். இருப்பினும், மந்திரி ஒருவர் ஆபாச இதழுக்கு எப்படி போஸ் கொடுக்கலாம் என்று சர்ச்சை எழுந்து உள்ளது. பெண்கள், ஓரினச்சேர்க்கை உரிமைகள், கருக்கலைப்பு ஆகியவை குறித்து பிளேபாய் இதழுக்கு 12 பக்க பேட்டியுடன் மார்லின் போஸ் கொடுத்து உள்ளார். 2017 முதல் பிரான்ஸ் அரசில் அங்கம் வகித்து வரும் மார்லின் சர்ச்சைகளுக்கு புதியவர் இல்லை. இருப்பினும், அவரது இந்த செயல் அரசில் இருக்கும் வலதுசாரிகளை கோபப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பிரதமர் தொடங்கிப் பல வலதுசாரிகளும் அவர் தவறு செய்துவிட்டதாகக் கருதுகின்றனர்.
முன் அட்டையில் மார்லின் ஷியாப்பாவுடன் இடம்பெற்ற பிளேபாய் இதழ் மூன்று மணி நேரத்திற்குள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல அரசியல்வாதிகள் இதற்கு எதிராக குரல் கொடுத்தாலும், வெளியிடப்பட்ட முதல் நாளில் 100,000 பிரதிகள் மூன்று மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்தன. இப்போது 60,000 மறுபதிப்பு செய்யப்படுகின்றன என்று பிளேபாய் இயக்குனர் ஜீன்-கிறிஸ்டோப் புளோரன்டின் தெர்வித்து உள்ளார்.