கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர் . மணிமேகலைக்கு 2வது திருமணம், ஜீவனுக்கு முதல் திருமணம் இருந்தும் இருவரும் கள்ளக்காதலில் தகாத உறவில் இருந்து உள்ளனர். நேற்று இரவு இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஜீவன் மணிமேகலையே கையால் தாக்கியுள்ளார். இதில் மயக்கம் அடைந்த மணிமேகலை உயிரிழந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் தகவல் அளித்து கொண்டிருக்கிறேன் ஆனைமலை காவல் நிலைய போலீசார் மணிமேகலை உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் கள்ளக்காதல் ஜீவனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்த சம்பவம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது இந்த சம்பவத்தில் மணிமேகலை ஜீவனுக்கு பிறந்த குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….
- by Authour
