திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டி மொராய் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சௌந்தரி ( 45 ). காதல் திருமணம் செய்த சௌந்தரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தமிழரசன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு சௌந்தரி வந்திருந்தார் குழந்தை பிறந்து ஒரு மாதமான நிலையில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரது தாயார் சரசு மகளை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சௌந்தரி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.