திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இதில் மேற்கு வங்காளம் மாநிலம் ஹரம்பூர் பகுதியை சேர்ந்த கோனிகா (19) என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று கோழிக்கறி சாப்பிட்டிருக்கிறார். பின்னர் ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிசிக்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் ரூமிற்கு கோனிகா திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்ச அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோனிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விஏஓ குமரவேல் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.