தஞ்சை அருகே இனாத்துக்கான்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி சரண்யா (33). இந்நிலையில் நேற்று முன்தினம் சரண்யா தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை மருங்குளம் – வல்லம் சாலையில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டிக் கொண்டு வீட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சரண்யா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட சரண்யா படுகாயமடைந்தார். தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனிற்றி சரண்யா இறந்தார். இதுகுறித்து சத்திய மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.