சென்னை வானகரம் பகுதியில் அடுகுமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில், அதில் பலர் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர், வீடுகளை நோட்டமிட்டவாறு ஒரு வீட்டின் ஹாலிங் பெல்லை அழுத்துகிறார். அப்போது ஒரு வீட்டில் இருந்து பெண் வெளியே வந்த நிலையில், அந்த பெண்ணை தாக்கி அந்த மர்ம நபர் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.