திருச்சி, உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராயர். இவரது மனைவி விஜயமேரி (60). சம்பவத்தன்று இவர் திருச்சி அரியமங்கலத்தில் இருந்து காந்தி மார்க்கெட்டிற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது காந்தி மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில் விஜயமேரி இறங்கிய போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனது அருகில் பஸ்சில் நின்று வந்த சந்தேகத்துக்கிடமான ஒரு பெண்ணை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் பெயர் பிரியா (வயது 35) சேலம் மாவட்டம் காக்கா பாளையத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பது மனைவி பிரியா என தெரிய வந்தது. மேலும் இவர் ஜெய மேரியின் கழுத்தில் இருந்த நகையை திருடியது தெரிய வந்தது.இதை அடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து ப்ரீயாவை கைது செய்தனர்.
