திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40) – இவர் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சபுராபீவி(35)
என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்துள்ளது – இந்நிலையில் சபுரா பிபியை சதீஷ்குமார் சண்டை போட்டுக்கொண்டு அழைத்து சென்ற நிலையில் இருவரையும் காணவில்லை என்பதால் சபுரா பிபியின் உறவினர்கள் பொன்மலை காவல்நிலத்தில் புகார் அளித்தனர்.
பழைய பொன்மலை மகளிர் காவல் நிலையம் பின்புறம் உள்ள பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் ஏற்கனவே இவர்கள் குடியிருந்து வந்த நிலையில் – அந்த விட்டில் சபுராபீவியை அழைத்து சென்று முதலில் தூக்கிட்டு சதீஷ்குமார் கொள்ள முயற்சி செய்து பின்னர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பொன்மலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . தப்பிச்சென்ற சதீஸ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கணவனே மனைவியை கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.