திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரின் மனைவி மாலதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து போதையில் மாலதியுடன் தகராறு செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது . இதில் ஆத்திரமடைந்த திருமூர்த்தி , மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருக்கிறார். அதன் பின்னர் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார் .
மதியம் இந்த சம்பவம் நடந்த நிலையில் இரவு வெகு நேரமாகிய வீட்டில் மின்விளக்குகள் எரியாததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாலதி சடலமாக கிடந்திருக்கிறார். இதன் பின்னர்அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாலதியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் .