திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஐயாசாமி மகன் பாலச்சந்திரன் (43). இவரது மனைவி மகாலட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலச்சந்திரன் மூன்றாண்டுகள் சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சொந்த ஊர் திரும்பினார்.
சொந்த ஊர் திரும்பியவர் சொந்தமாக சம்சா செய்து வியாபாரம் செய்து வந்தார். சம்சா வியாபாரம் மூன்று மாதமாக செய்து வந்தார். இதில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்று அவரது மனைவி பாலச்சந்திரன் உடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மகாலட்சுமி நீங்கள் மீண்டும் சிங்கப்பூருக்கே வேலை செய்ய போங்கள் என்று வம்பு இழுத்து உள்ளார். இதனால் மனைவியின் மீது சந்தேகம் அடைந்த பாலச்சந்திரன் வெங்காய வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் பாலச்சந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இது சம்பந்தமாக கோர்ட் விசாரணை நடந்து வந்தது
இந்நிலையில் இன்று திருச்சி மகிலா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் பாலச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது மேலும் அபராதம் கட்ட தவறினால் ஆறு மாதம் கூடுதல் தண்டனையும் விதிக்கப்பட்டது.