திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவரது மனைவியுடன் பெரிய மிளகு பாறை துலுக்கத் அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகியுள்ளார்.
இதை அறிந்த ஆசிக் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான் பீட்டர்ரை
ஆசிக் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆசிக் மீது செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் ஜான் பீட்டர்
மிளகுபாறை பகுதியில் நடந்து சென்ற போது ஆசிக் அவரது உறவினர் நிஜாம் ஆகிய 2 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் அவரது கை மற்றும் காது பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் ஜான் பீட்டரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து செசன்ஸ்கோர்ட் போலீசார் ஆசிக், நிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.