கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் அவரது மனைவி மற்றும் மகன்களுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்து உள்ளது. இந்நிலையில், சொத்து தகராறு முற்றிய நிலையில், மனைவி மற்றும் மகன்கள் இணைந்து குப்புசாமியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் அவர் பலத்த காயம்
அடைந்து உள்ளார். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான குப்புசாமி இதுகுறித்து நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் , இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.