Skip to content

கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி துளசிமணி. இவர்  இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் ‌ எனது கணவரான ஆனந்தனை எனது மாமியார் குடும்பத்தினர் சொத்துக்காக ‌1.3.25.  அன்று கொலை செய்துவிட்டனர் எனவும் மேலும் எனக்கு சத்யா,

கோபி, சோனியா, டேனியல், ஸ்வேதா, சங்கர், இந்து, ஆகிய ஏழு பேர் மீது சந்தேகம் உள்ளது. மேலும் இவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி இரவு கலைஞர் நகர் பகுதியில் ஆனந்தன் தெருவில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பு என்பவரால் பிளேமால் கழுத்தறுக்கப்பட்டும் சுத்தியால் அடித்தும் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!