Skip to content

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது கரூர் மற்றும் சுற்றுவட்டார

பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர் மாநகர் கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, குளித்தலை, பரமத்தி, புகலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!