தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை காலைக்குள் தற்காலிக புயலாக வலுப்பெறும். எதிர்பார்த்த மேக கூட்டங்கள் சேராததால் மழை பெய்யவில்லை. தற்போது அது சென்னையில் இருந்து 480 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே அது 30ம் தேதி கரையை கடக்கும். புயல் வலுப்பெற வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.