Skip to content

ஜெ.,வை எதிர்த்து பேசியது ஏன்?.. வீடியோவில் ரஜினி பரபரப்பு பேச்சு…

  • by Authour

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். எம்ஜிஆர் நடித்த படங்கள் மட்டுமின்றி, ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’, ‘மூன்று முகம்’, ‘தங்கமகன்’, ‘ராணுவ வீரன்’, ‘பணக்காரன்’ போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவர் மறைந்து தற்போது ஓராண்டைக் கடந்துள்ளது. இதையொட்டி ரஜினிகாந்த் தற்போது ஆர்.எம்.வி. குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியதாவது: ஆர்.எம்.வி பற்றிய ஆவணப்படத்தில் அவரைப் பற்றி பேசுவதில் மிகமகிழ்ச்சி.

என் மீது மிகவும் அன்பு காட்டியவர்கள் நான்கு பேர். பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வி. இவர்களில் யாரும் இப்போது இல்லை என நினைக்கும்போது அவர்களை மிஸ் செய்கிறேன். பாட்ஷா விழாவில் ஆர்.எம்.வி. இருந்தபோது வெடிக்குண்டு கலாச்சாரத்தைப் பற்றி பேசினேன். முதலமைச்சரை வைத்துக் கொண்டு நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. அப்போது அதுப் பற்றி சரியான தெளிவு இல்லை. அதன் பிறகு ஆர்.எம்.வி. வகித்த அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா அவரை தூக்கிவிட்டார். அரசுக்கு எதிராக ரஜினி எப்படி பேச முடியும் என சொல்லி அவரை தூக்கிவிட்டார். அது தெரிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் தான் அவருக்கு இப்படி எனது என நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அப்போதே ஆர்.எம்.வி-க்கு ஃபோன் பண்ணினேன். யாரும் எடுக்கல. காலையில் ஃபோன் செய்தபோது அவர் எடுத்தவுடன் ஒன்னுமே நடக்காத மாதிரி, பதவி தான, விடுங்க. அதைப் பற்றி எதுவும் நினைக்காதீங்க, நீங்க மகிழ்ச்சியா இருங்க. இப்ப என்ன ஷூட்டிங்குன்னு சர்வ சாதாரணமா கேட்டார். எனக்கு அந்த தழும்பு எப்போதுமே போகாது. ஜெயலலிதாவுக்கு எதிராக அந்த விழாவில் நான் குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும் இந்த காரணம் ரொம்ப முக்கியமானது. அதுக்கப்புறம் ஆர்.எம்.வி-க்கிட்ட நான் ஜெயலலிதாவிடம் பேசட்டுமா எனக் கேட்டேன். அதற்கு அவர், அந்தம்மா ஒரு முடிவெடுத்தா மாத்த மாட்டாங்க, நீங்க பேசி, இருந்த மரியாதையையும் இழக்க வேண்டாம். அப்படி நீங்க சொல்லித்தான் நான் அங்க சேர வேண்டிய அவசியம் இல்லை. நீ விட்டுடு என சொன்னார். அந்த மாதிரி ஒரு பெரிய மனிதர். அவர் உண்மையிலேயே கிங் மேக்கர். இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

 

error: Content is protected !!