Skip to content
Home » அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

2024 -மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரசாரமாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. இதனால், ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில்(பைசாபாத் தொகுதி) பாஜகவிற்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என நினைத்தனர்.  தேர்தலுக்காகவே பாஜகவினர் இந்த கோவிலை அவசர அவசரமாக திறந்தனர்.  இதை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தினர்.

இத்தனைக்கும் இது அரசாங்க கோவில் இல்லை. ஒரு தனியார் அறக்கட்டளை கோவிலுக்காக  பிரதமர் உள்ளிட்ட்ட மத்தி்ய அமைச்சரவையே கோவில் திறப்பு விழா பணியில் ஈடுபட்டது. பிரதமர் மோடி இதற்காக 11 நாள் விரதம் இருக்கிறார் என்று  செ்யதிகள் வந்தது.  கோவில் திறப்பு விழாவில் மோடியே முன்நின்று அத்தனை வேலைகளையும் செய்தார்.  ஆனாலும்  அயோத்தியில் பாஜக வேட்பாளர்  லல்லுசிங் அங்கு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்  அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள்  கூடுதலாக பெற்று  பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்  ெகாடுத்தார். அத்துடன் உபியில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்தது.

அயோத்தி வெற்றி குறித்து  சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிேலஷ் யாதவ் கூறியதாவது:

உத்தரபிரதேசத்தில் பாஜக இன்னும் அதிக தொகுதிகளை இழந்திருக்கும். சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்த அயோத்தி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ஏழைகளின் நிலத்தை பொய் வழக்குகள் போட்டு வலுக்கட்டாயமாக பாஜகவினர் பறித்தனர்.

அவர்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டது. சந்தை விலைக்கு இணையாக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. புனிதமான காரியத்திற்காக ஏழைகளை அழித்தார்கள். இதனால் தான் அயோத்தி மற்றும் பல தொகுதிகளில் உள்ள மக்கள் பாஜகவிற்கு எதிராக ஓட்டளித்தனர் என நினைக்கிறேன்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!