சட்டமன்ற கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த நூதன போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். அதிமுகவினர் இன்றும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். ஆனால் இன்று அதிமுகவினர் கருப்பு சட்டை அணியவில்லை.
அதே நேரத்தில்இன்று சட்டமன்றத்துக்கு வந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் இவன் தான் அந்த சார் என்ற சிறிய துண்டு பிரசுரம் கொண்டு வந்திருந்தனர். அதில் எடப்பாடி பழனிசாமி படமும், சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிமுக கிளை செயலாளர் சுதாகர் படமும் இடம் பெற்றிருந்தது. இந்த பிரசுரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் சட்டமன்றத்துக்கு வெளியே நின்று இவன் தான் அந்த சார் என கோஷமிட்டனர்.