Skip to content

யார் இந்த சூரியவன்சி? கிரிக்கெட் உலகம் வியப்பு

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்  பிளே ஆப் சுற்றை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.நேற்று முன்தினம் வரை 46 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று 47வது போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்தது.  வழக்கமான போட்டி தானே என்று தான் கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்தனர்.

அதுவும் பலம் பொருந்திய குஜராத் அணியுடன்,  9வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மோதுகிறதா என்ற நினைப்புடன் தான் மைதானத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த குஜராத் அணி குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களும், பட்லர் 50 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 210 ரன்  என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியும், யஷஸ்வி ஜெய்வாலும் களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய  சூர்யவன்ஷி  35 பந்துகளில் சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 166 ரன்களாக உயர்ந்த போது (11.5 ஓவர்) சூர்யவன்ஷி 101 ரன்களில் (38 பந்து, 7 பவுண்டரி, 11 சிக்சர்)பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை சூர்யவன்ஷி படைத்தார்.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 70 ரன்களுடனும், கேப்டன் ரியான் பராக் 32 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதற்கு முன் அவர் ஐபிஎல்தொடரில் 2 போட்டிகளில் களம் இறக்கப்பட்டார். முதல் போட்டியில் லக்னோவுக்கு எதிராக  34 ரன்னில் ஆட்டம் இழ்நதார். 2வது போட்டியில் பெங்களூருக்கு எதிராக 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். 3வது போட்டியில்  நேற்று  கிரிக்கெட் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சாதனை படைத்து விட்டார்.

சூரியவன்ஷி பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டம் தாஜ்பூர் என்ற கிராமத்தில்  27.3.2011ல் பிறந்தார்.  4 வயதிலேயே கிரிக்கெட் மட்டையை தூக்கிய  சூரியவன்ஷி  தந்தையிடமே ஆரம்ப கால பயிற்சி பெற்றார்.  9வயதிலும் சமஸ்திபூர் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். 12 வயதிலேயே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்தார்.  கடந்த ஆண்டு  பீகார் மாநில அணிக்காக ஆடினார்.

செப்டம்பர் 2024 ல், ஆஸ்திரேலியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு எதிரான போட்டியில்  இந்திய அணியில் இடம் பிடித்தார். செப்டம்பர் 2024 ல், ஆஸ்திரேலியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு எதிரான போட்டியில்  இந்திய அணியில் இடம் பிடித்தார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் அவர் 58 பந்துகளில் சதம் அடித்தார், இது 104 ரன்களுக்கு ரன் அவுட் ஆவதற்கு முன்பு இந்திய 19 வயதுக்குட்பட்ட வீரரின் வேகமான சதமாகும்.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணிக்கு இவர் வாங்கப்பட்டபோது  அவருக்கு வயது 13.  அப்போது அவர் ரூ.1.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஏலம் எடுக்கப்பட்டவர்களில் மிகவும் வயது குறைந்தவர் இவர் தான்.  மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி  பெரிது என்பதை நிரூபித்து விட்டார்.

கிரிக்கெட் உலகமே இன்று யார் இந்த  சிறுவன்  சூரியவன்ஷி என்ற தேடலில் இறங்கி உள்ளது.

 

error: Content is protected !!