கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் அவரது செல்வாக்கு சரிந்தது. அதையடுத்து நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்பு அவருக்கும் லிபரல் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ட்ரூடோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்தப் பின்னணியில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும், புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடரப் போவதாகவும் ட்ரூடோ அறிவித்தார்.
கனடா போக்குவரத்துத் துறை அமைச்சரும், லிபரல் கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ஆனந்தின் தந்தை ஆனந்த், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தாய் சரோஜ் ராம் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவர். மற்றொரு சாத்தியமான வேட்பாளராக புதிய நிதி அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் கருதப்படுகிறார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், ட்ரூடோவின் நெருங்கிய நண்பருமான டொமினிக் லெப்லாங்க், சமீபத்தில் டிரம்ப் உடனான இரவு விருந்தில் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இணைந்து பங்கேற்றார். எனினும், ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன், கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு நிகழாது என கூறப்படுகிறது. கனடா பிரதமர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் அடிபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.