கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சின்ன தாராபுரத்தில் வட்டார மருத்துவ அலுவலராக சாமிநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு மருத்துவர் சாமிநாதன் மற்றும் பொன்ராஜ் காரில் கரூரிலிருந்து மதுரை செல்வதற்காக மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த பொழுது முன்னாள் சென்ற ஈச்சர் வாகனத்தின் மீது கார் மோதியதில் சின்ன தாராபுரம் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வரும் சாமிநாதன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு மேலும் பொன்ராஜ் என்பவர் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.