மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேர்தல் தொடர்பான வன்முறையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். ஜூன் 8ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், மாநிலம் முழுவதும் பரவலான வன்முறைகள் பதிவாகியுள்ளன. ஒரு இளம்பெண் உட்பட 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இன்றைய வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது.கொல்லப்பட்டவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள். பா.ஜ.க., இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் ஆகிய கட்சிகள சேர்ந்த தொண்டர்கள் தலா ஒருவர் மேலும் அரசியல் அடையாளம் தெரியாத 2 நபர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க கோரிக்கை வைத்துள்ளது.