Skip to content

ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியை இன்று ஒரு இளைஞர் வீடு புகுந்து தாக்கினார். அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கத்தினர் வந்ததால் அவர் தப்பி ஓடினார். கிராம மக்கள் அவரை துரத்தி பிடித்து கட்டிப்போட்டு தாக்கினர். இதில் அந்த வாலிபர் இறந்து விட்டார். அவரது பெயர் ராபி ஓரான். இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இந்த சம்பவம் தொடர்பாக முதியதம்பதியின் மகன் மணிகண்டபூபதியை போலீசார் கைது செய்தனர்.
error: Content is protected !!