நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன. இந்த கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் உள்ள இந்த கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என மம்தா அறிவித்து உள்ளார். அதை ஏற்கமாட்டோம் என காங்கிரஸ் பதிலடி கொடுத்த நிலையில், நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என மம்தா இன்று அறிவித்தார். அதே நேரத்தில் நாங்கள் இந்தியா கூட்டணியில் தான் உள்ளோம். ஆனால் ராகுல் பாதயாத்திரையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றும் மம்தா திட்டவட்டமாக கூறி உள்ளார். இதனால் மேற்கு வங்கத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.