Skip to content

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஆயுள் தண்டனை எதிர்த்து அரசு மேல்முறையீடு

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த  கொலை தொடர்பாக  சஞ்சய் ராய் என்பவரை   சிபிஐ போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கில் நேற்று நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்தார்.  அவர்,  குற்றவாளி சஞ்சய் ராய்க்கு  சாகும்வரை   சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  அத்துடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும்  என  மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொருவரும் எதிர்பார்த்த நிலையில்,   ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால்,  மேற்கு வங்கத்தில் டாக்டர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மேற்கு வங்க அரசு, இந்த  தீர்ப்பை  எதிர்த்து ஐகோர்ட்டில்  மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்து உள்ளது.