Skip to content
Home » 4300 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்டம்… கலெக்டர் தகவல்…

4300 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்டம்… கலெக்டர் தகவல்…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் செம்மயில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் .மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்ததாவது.

செம்மயில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தற்போது 1026 பங்குதாரர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை முன்னோடி உற்பத்தியாளர் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வணிக வைப்பு நிதியாக ரூ.10 இலட்சமும், இணைமானிய நிதி மூலம் 15 நபர்களுக்கு ரூ.42 இலட்சமும், நுண் நிறுவன நிதி கடன் 100 நபர்கள் ரூ.39 இலட்சமும், சமுதாய திறன் பள்ளி மூலம் 200 நபர்களுக்கு ரூ.8.13 இலட்சமும், சமுதாய பண்ணை பள்ளி முலம் 4260 நபர்களுக்கு ரூ.28.00 இலட்சமும், சமுதாய பண்ணை பள்ளி முதன்மை பயிற்றுநர் வீரசுந்தரி மறைவு காரணமாக அவர்களுடைய மதிப்பூதியம் ரூ.5000 அவர்களின் கணவருக்கு வழங்கப்பட்டது. ஆக மொத்தம் செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட 94 ஊராட்சிகளில் 4300 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, மஞ்சுளா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் .இளநங்கையரசி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *