உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா மற்றும் குசல் பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்கள் இருவரும் 61 ரன்கள் மற்றும் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினர்.
தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். 43.3 ஓவர்களில் இலங்கை அணி 209 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது.