தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் 1ம் தேதியும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 2ம் தேதியும் போட்டிகள் நடக்கிறது.
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 9 மாவட்டங்களில் பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டிகளில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துகொள்ளும் பள்ளி கல்லூரி மாணவர்கள் தாங்கள் கல்வி பயில்வதற்கான உறுதி சான்றிதழ் (Bonofide Certificate) மற்றும் தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கின் புத்தக நகலுடன் காலை 7 மணியளவில் போட்டி நடக்கும் இடத்திற்கு நேரில் ஆஜராகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை, 7401703498 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் .கவிதா ராமு, தெரிவித்துள்ளார்.