ஆண்களுக்கான ஜூனியர் பளுதூக்கும் போட்டி சேலத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான்
மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதற்காக அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
மாணவர் அப்துல் ரஹ்மான் தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்
மற்றும் பதக்கத்தை பள்ளி முதல்வர் தங்க மூர்த்தியிடம் காட்டி வாழ்த்து பெற்றார்.அவருக்கு மாநில ஆசிரியர்மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் நினைவுபரிசு வழங்கி
வாழ்த்தினார்.