அஜித் மற்றும் ஷாலினி கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று அஜித் – ஷாலினி தம்பதியின் 23 வது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஜித் – ஷாலினி தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி அவ்வப்போது தனது குடும்பத்தினர் புகைப்படத்தை பதிவு செய்து வருவார். அந்த வகையில் நேற்று தனது திருமண நாளை அடுத்து அஜித் உடன் இணைந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கருப்பு வெள்ளையில் உள்ள அந்த புகைப்படத்தில் அஜித்தை அவர் கட்டிப்பிடித்து கன்னத்தோடு கன்னம் ஒட்டிய ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகிறது . ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் மற்றும் ஏராளமான கமெண்ட்களை குறித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.