தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா திருமணம் 1990 ஜனவரி 31ல் நடந்தது. இன்று அவர்களது திருமண நாள். இதையொட்டி தேமுதிக துணை பொதுச் செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் , அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர் விஜயகாந்த் , பிரேமலதாவை நேரில் சந்தித்து திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அப்போது விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன். சண்முகபாண்டியன் உடன் இருந்தனர்..