Skip to content

மகளிரின் முன்னேற்றத்திற்கு என்றும் அயராது உழைப்போம்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

மகளிரின் முன்னேற்றத்துக்கும் பொருளாதார சுதந்திரத்துக்கும் என்றும் அயராது உழைப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்துக்காக பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வரும் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேந்த மகளிருக்கு ரூ.3,190 கோடி அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை வழங்கி வாழ்த்திய நிகழ்வில் பங்கேற்கிறோம்.

பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளுவதற்கு மகளிர் காவலர்களுக்கு திறன் பயிற்சியை தொடங்கி வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு பல்வேறு பயன்களை அளிக்கக் கூடிய ID Cards, அவ்வையார் விருது, பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது ஆகியவற்றை வழங்கி, ரூ.72 கோடி மதிப்பில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , தேனி உள்ளிட்ட இடங்களில் தோழி விடுதியை கட்டுவதற்கு அறிவிப்பினை வெளியிட்டார்கள். மகளிரின் முன்னேற்றத்துக்கும் பொருளாதார சுதந்திரத்துக்கும் என்றும் அயராது உழைப்போம். மகளிர் வாழ்வு செழிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்

error: Content is protected !!