Skip to content
Home » இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொட்ரபாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் இந்திக்கு, மற்ற இந்திய மொழிகளை விட, எல்லா வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற நன்மைகளைத் தொடர்ந்து அளித்து வருகின்றன. மேலும், மக்கள் நலனுக்காக அல்லாமல், நம் தொண்டையில் இந்தியை திணிப்பதற்காக தங்களுடைய மதிப்புமிக்க வளங்களை செலவழிப்பதில் அவர்கள் குறியாக உள்ளனர்.

இந்த பட்டியலில் சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இணைந்துள்ளது. இந்த அறிக்கை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும் அதன் தலைவர் நீரஜா கபூர், இந்தி பேசாத இந்தியர்கள் மற்றும் இந்தி பேசாத நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஊழியர்களிடம் காட்டப்படும் அவமரியாதைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்தி பேசாத இந்திய குடிமக்கள் தங்களின் கடின உழைப்பு மற்றும் திறமையால் இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தங்களது பங்களிப்பு இருந்தபோதிலும், தங்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் தர சிகிச்சையை பொறுத்துக்கொள்ளும் நாட்கள் போய்விட்டன.

தமிழகமும் திமுகவும் நமது வரலாற்றில் எப்பொழுதும் பாடுபட்டது போல் இந்தித் திணிப்பை நிறுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும். ரயில்வே, தபால் துறை, வங்கி மற்றும் பாராளுமன்றம் என நம்மையும் நம் மக்களையும் நாளுக்கு நாள் பாதிக்கும் மத்திய அரசில் எல்லா இடங்களிலும் இந்திக்கு அளிக்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம். நாம் நம்முடைய வரிகளை செலுத்துகிறோம், முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறோம் மற்றும் நமது வளமான பாரம்பரியம் மற்றும் இந்த தேசத்தின் பன்முகத்தன்மையை நம்புகிறோம். நமது மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். நம் நாட்டில் தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!