தொகுதி மறு சீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் துவங்கப்பட்டுள்ளது. 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். கர்நாடக துணை முதல்வர் டி.கெ.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோரும் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதியை மறுசீரைமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது.
கூட்டுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஏற்க முடியாது. நமது பண்பாடு அடையாளம் ஆபத்தை சந்திக்கும் சமூகநீதி பாதிக்கப்படும். இந்திய ஜனநாயகத்தை காக்க நாம்
ஒன்று கூடி உள்ளோம். கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் போராடியதால் தான் சுதந்திரம் கிடைத்தது. தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஏற்க முடியாது. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வெறு மாநிலங்களில் இருந்து ஒன்று கூடி உள்ளோம். மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. காலம் காலமாக பாதுகாக்கப்படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும்.நமது பண்பாடு அடையாளம் ஆபத்தை சந்திக்கும் சமூக நீதி பாதிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்கும். இந்தப்போராட்டம் மறு சீரமைப்புக்கு எதிரானது அல்ல. கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது. தொகுதி மறு சீரமைப்பால் தென்மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு. நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கு வலியுறுத்துவது தான். மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பாஜக எப்போதும் இருந்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் தௌிவாக இல்லை. குழப்பமாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்படுகிறது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும். என்று இவ்வாறு தெரிவித்தார்.