கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு
இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனீன் பிரசாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விஜய் கட்சியால் காங்கிரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. விஜய் முன்னணி நடிகர் என்பதால் இளைஞர் பட்டாளம் அவரை தேடி செல்கிறது. அதனால் அவரை கண்டு எங்களுக்கு பயமில்லை. அதேபோல் நரம்பு நரம்பு புடைக்க பேசுவதால், சீமானை நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
அமெரிக்காவில் அதானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அவமானம். ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த பா.ஜனதா முயற்சி செய்யவில்லை. தமிழகத்தில் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். தமிழக அரசு இன்னும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணை துரிதப்படுத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையும் முடிவு செய்வார்கள், என்றார்