கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் நீர்நிலைகள் வறண்டதால் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீருக்கு அலையும் காட்சிகளை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
“கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்!” என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாடியில் பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் புகைப்படங்களை பகிர்ந்து இதனை அவர் தெரிவித்துள்ளார்.