Skip to content
Home » நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…

நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் நீர் நிலையை பாதுகாக்கும் வகையில் தூர்வாரும் பூர்வாங்க பணிகள் பூமி பூஜைடன் தொடங்கியது.

சிறுகனூரில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு செல்லியம்மன் கோவில் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் குளம் வெட்டப்பட்டது.இந்த குளத்தின் அருகில் இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 100 அடி ஆழத்தில் கிணறு வெட்டி அந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். குளத்திற்கு மழைக்காலங்களில் வரத்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நாளடைவில் வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பின்றி கிடந்ததால் குளம் வறண்டு போனது இந்நிலையில் இந்த குளத்தை கூறுவாரி நீர் நிலையை பாதுகாக்க விவசாயிகள் இளைஞர்கள் முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடங்கினார்.இதனை தொடர்ந்து கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாய சங்கம் அசோக் ராஜா பவுண்டேஷன்,
விவசாயிகள்,இளைஞர்கள்,ஊர் பொதுமக்கள் இணைந்து மணச்சநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் ஒப்புதலோடு நீர் நிலைகளை பாதுகாக்கவும், நிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் குளத்தை தூர்வாரி அதன் வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளு க்காண பூமி பூஜை நடைபெற்று இன்று பணிகள் தொடங்கியது. இந்தப் பணிகளுக்காக கடைமடை பகுதி விவசாய சங்கம் சார்பில் ஜேசிபி இயந்திரத்தை இலவசமாக வழங்கினார். மேலும் இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள வரத்து வாய்க்கால்கள் மற்றும் குளத்தை தூர்வாரி, சீரமைக்கும் பணிக்கான முழு நிதியையும் அசோக் ராஜா பவுண்டேஷன் ஏற்றுக்கொண்டது.

இது குறித்து அசோக் ராஜா பவுண்டேஷன் நிறுவனர் அசோக் ராஜா கூறியதாவது இப்பகுதி உள்ள இளைஞர்கள் இந்த குளத்தை தூர்வாரி நேரலை பாதுகாக்க என்னிடம் கேட்டுக் கொண்டனர் அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் முதன் முறையாக குளத்தை தூர்வாரும் பணிகளில் இறங்கியுள்ளோம் இதே போன்று மனுஷனால் பகுதி உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குளங்களை தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்கவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இளைஞர்கள்,விவசாயிகளோடு இணைந்து செயல்பட உள்ளோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *