திருச்சி சார்க்கார் பளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே மண்டலம் 2க்குட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது , சங்கிலியாண்டபுரம் பழையது , கல்லுக்குழி புதியது , கல்லுக்குழி பழையது , சுந்தராஜநகர் புதியது , சுந்தராஜபுரம் பழையது , காஜாமலை புதியது , மண்டலம் 3க்குட்பட்ட அரியமங்கலம் , உக்கடை , தெற்குஉக்கடை , ஜெகநாதபுரம் புதியது , ஜெகநாதபுரம் பழையது , மலையப்பநகர் புதியது , மலையப்ப நகர் பழையது , ரயில்நகர் புதியது , ரயில்நகர் பழையது , மகாலெட்சுமி நகர் , முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது , முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது , எம்.கே.கோட்டை செக்ஸன் ஆபிஸ் , நாகம்மை வீதி , எம்கே கோட்டை நூலகம் , பொன்னேரிபுரம் புதியது , பொன்னேரிபுரம் பழையது , பொன்மலைப்பட்டி , ஐஸ்வர்யாநகர் , மண்டலம் 4க்குட்பட்ட ஜே.கே. நகர் , செம்பட்டு , காமராஜ்நகர் ,எல்ஐசி புதியது , எல்ஐசி சுப்பிரமணிய நகர் , தென்றல்நகர் புதியது , தென்றல்நகர் பழையது , தென்றல்நகர் இபி காலணி , வி.என் . நகர் புதியது , வி.என் . நகர் பழையது , சத்தியவாணி முத்து கே.கே நகர் , சுப்பிரமணிய நகர் புதியது , சுப்பிரமணிய நகர் பழையது , ஆனந்த நகர் , கே.சாத்தனூர் , பஞ்சப்பூர் , அம்மன் நகர் , கவிபாரதிநகர் , எடமலைப்பட்டிபுதூர் புதியது , காஜாமலை பழையது , கிராப்பட்டிபுதியது , கிராப்பட்டி பழையது , அன்புநகர் பழையது , அன்புநகர் புதியது , ரெங்காநகர் ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 23ம் தேதி (நாளை) குடிநீர் விநியோகம் நடைபெறாது .
எனவே மறுநாள் 24ம் தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் . பொது மக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார் .