கரூரில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர். தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டார். அதன் ஒரு பகுதியாக கரூர் வாங்காபாளையம் பகுதியில் தண்ணீர் பந்தலை தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்
திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள், நீர் மோர், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார். மேலும் பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்களுக்கு தர்ப்பூசணி வழங்கினார்.