திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர், கீழபெருமழை, மேலபெருமழை ஆகிய பகுதியில் விவசாயத்திற்கு போதுமான நீர் வந்து சேரவில்லை. இதனால் சாகுபடி பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குன்னலூர் வளர்மதி, கீழபெருமழை செல்வி, மேலபெருமழை முருகானந்தம் ஆகியோர் தலைமையில் பாண்டி கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலையில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி முற்றுகை போராட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்குவந்த எடையூர் போலீசார் மற்றும் திருத்துறைப்பூண்டி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் ஆகியோ பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை இருபுறம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..
- by Authour
